ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சவுதி அரேபியாவிலுள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி ரமண்ய மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை மாற்றுமாறு கோரும் மேன்முறையீடும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் அனோஜன் சிவராசாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.
இதற்கு எதிராக அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, தண்டனைக்கு எதிரான மேலதிக மனுவொன்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, தொழில் வாய்ப்புக்காக சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.